ஆடி மாதம் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு ஆறு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சதுரகிரி மலை அருகே வனப்பகுதியில் காட்டுத்தை ஏற்பட்டதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி கோவிலுக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்படுவதாகவும் தீயணைக்கப்படும் பட்சத்தில் இனிவரும் நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் அறிவித்தனர்.

இந்நிலையில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு ஆறு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 12 சனிக்கிழமை முதல் ஆகஸ்ட் 17 வியாழக்கிழமை வரை 6 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.