கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உளவு பார்த்த குற்றத்திற்காக அவர்களுக்கு இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியர்களை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் பாஜக செய்தி தொடர்பாளர் அஜய் அலோக்கிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது “கத்தார் அரசின் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து சட்ட போராட்டத்தை மேற்கொள்ள இருக்கிறோம். உலக அளவிலான நீதிமன்றம் வரை நம்மால் செல்ல முடியும். இந்திய அரசு இந்த விவகாரத்தில் சரியான முடிவை எடுக்கும். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.