எனது வீரர்களுடன் யாரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அவர்களைக் காக்க எனக்கு முழு உரிமை உண்டு என்று கவுதம் கம்பீர் அதிரடியாக தெரிவித்துள்ளார்..

2023 ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இடையேயான சண்டையை யாராலும் மறக்க முடியாது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இருவரும் களத்தில் மோதினர்.பின் போட்டி முடிந்ததும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வழிகாட்டி கவுதம் கம்பீரும் கோலியிடம் வாக்குவாதம் செய்யமேலும் சூடுபிடித்தது. தகராறு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, நீண்ட நேரத்துக்குப் பிறகு பிரச்னை ஓய்ந்தது. ஆனால் இதற்குப் பிறகும் சமூக வலைதளங்களில் சர்ச்சை தொடர்ந்தது. இந்த சண்டை தொடங்கி 7 மாதங்கள் ஆகிறது,

இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் முன்னாள் வழிகாட்டியான கம்பீர் இது குறித்து தனது மௌனத்தை உடைத்துள்ளார். எனது வீரர்கள் குறித்து வந்தால் அதற்கு தக்க பதில் அளிக்கப்படும் என்றார் கம்பீர். இந்த சர்ச்சை முடிவுக்கு வந்ததையடுத்து ANI போட்காஸ்டில் பேசும் போது கவுதம் கம்பீர் தனது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து பேசிய முன்னாள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக இருந்த கவுதம் கம்பீர், “எனது வீரரை பாதுகாப்பது எனது வேலை. எனது வீரரிடம் தவறாக நடந்துகொள்ளும் உரிமையை யாருக்கும் வழங்க மாட்டேன். ஒரு வழிகாட்டியாக, வீரரைப் பாதுகாப்பதும் ஒவ்வொரு தீமையையும் தடுப்பதும் எனது கடமை.

“ஒரு வழிகாட்டியாக அப்படி நினைப்பது கொஞ்சம் வித்தியாசமானது. ஒருமெண்டாராக, எனது வீரர்களுடன் யாரும் சண்டையிட முடியாது, இதில் எனக்கு சற்று வித்தியாசமான நிலைப்பாடு உள்ளது. ஆனால் எனது வீரர்களிடம் யாராவது தவறாக நடந்து கொண்டால் அதை என்னால் பார்க்க முடியாது. போட்டியின் போது மைதானத்தில் ஏதாவது நடந்தால் என்னால் அங்கு எதுவும் செய்ய முடியாது. அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை. ஆனால், போட்டி முடிந்ததும் எனது வீரரை யாராவது அப்படி (கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால்) நடத்தினால், அந்த வீரருக்கு ஆதரவாக நிற்பேன். அவர்களை பாதுகாக்க எனக்கு முழு உரிமையும் உள்ளது. இது எனது உரிமை” என்று   தெளிவாக கூறினார்.

விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இடையேயான சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருவரும் இணைந்தனர். அதனால் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஐபிஎல் 2023ல் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் வழிகாட்டியாக கவுதம் கம்பீர் இருந்தார். இப்போது கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மீண்டும் (மெண்டாராக) கைகோர்த்துள்ளார். கம்பீர் தலைமையில் கேகேஆர் அணி 2012 மற்றும் 2014ல் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.