கோடை காலத்தில் கருப்பு கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொதுவாக நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் அனைவருமே கருப்பு வெள்ளை உடைக்கு மேல் கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, கருப்பு கவுன் ஆகியவற்ற அணிந்து ஆஜராக வேண்டும். இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மார்ச் முதல் ஜூலை வரை கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்திடம் மெட்ராஸ் பார் அசோசியேஷன் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து சென்னை பார் அசோசியேசன் விடுத்த கோரிக்கையை ஏற்று, கருப்பு கவுன் அணிய தேவையில்லை.ஆனால், கருப்பு கோட் மற்றும் கழுத்தில் வெள்ளைப் பட்டை கட்டாயம் அணிய வேண்டும். இது சென்னை ஐகோர்ட், மதுரை கிளை, தமிழ்நாடு & புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் என