மத்திய அரசு பெண் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற சிறப்பு சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் உதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். 8.2% வட்டி வழங்கப்பட்டு வருகின்றது. ஆண்டுக்கு 48 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யும் பட்சத்தில் முதிர்வு காலத்தில் இறுதியில் 14 லட்சம் ரூபாய் வட்டி தொகையாக பயனர்களுக்கு கிடைக்கும். பெண் குழந்தைகளுக்கு பத்து வயதுக்கு உட்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் பயனர்களாக இணையலாம்.

18 ஆண்டு முதல் காலத்தின் போது அல்லது பெண் குழந்தைக்கு 18 வயதாகும் போது அல்லது கல்வி அல்லது திருமணத்திற்காக சேமிப்பு கணக்கில் இருந்து தொகையை எடுக்கலாம். ஒவ்வொரு மாதமும் நான்காயிரம் ரூபாய் சேமிக்கும் போது 48 ஆயிரம் ரூபாய் ஒரு ஆண்டில் சேமிக்க முடியும். 15 ஆண்டுகள் டெபாசிட்டிற்கு பிறகு 7,20,000 முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் இதற்கு 15 புள்ளி 14 லட்சம் வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தின் உதிர்வில் மொத்தம் 22 லட்சத்தி 34 ஆயிரம் ரூபாய் நீங்கள் ரொக்கமாக பெறலாம்.