புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில் மனித கழிவுகளை சோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து நீர் தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்று மனிதக் கழிவுகள் கலந்த நீரை பகுப்பாய்வு மையத்தில் சோதனை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ரத்த மாதிரி பரிசோதனைக்கு எட்டு பேர் வரவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆயுதப்படை போலீஸ் சார் உட்பட 3 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் படி இந்த பரிசோதனை நடைபெறுகிறது. DNA பரிசோதனைக்கு வராததற்கு காரணம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்