உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விதமான சாதனைகள் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறார்கள். அந்த வகையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த காளைமாடு ஒன்றை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதாவது உலகின் உயரமான காளை  என்ற பெருமையை பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த காளை  ஆறடி 4.5 அங்குலம் உயரம் கொண்டது. இந்தக் காளையின் பெயர் ரோமியோ. இதற்கு முன்னதாக டாமி என்ற காளை உலகின் உயரமான காளை என்ற பெருமையை பெற்று கின்னஸ் சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை முறியடித்து ரோமியோ கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.