உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஊர்களும் தனித்தனி கால நிலைகளைக் கொண்டுள்ளது. அதில் மழைக்காலம், வெயில் காலம், குளிர்காலம், பனிக்காலம் என பல்வேறு வகைகள் உண்டு. அந்த வகையில் தற்போது ஒரு நகரத்தில் வருடம் முழுவதும் தினசரி மழை பொழியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.? ஆம் அது உண்மைதான். அதாவது பிரேசிலில் உள்ள பெலேம் நகரம் பரபரப்பான துறை நகரங்களில் ஒன்று. இந்த நகரத்தில் மதியம் 2 மணிக்கு மேல் தினம்தோறும் மழை பெய்யும்.

இந்த நகரம் கடந்த 1616 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிலையில் பல கலை நயமிக்க இடங்கள், சிலைகள், இயற்கை வளங்கள் போன்றவைகள் மிகுந்து காணப்படுகிறது.  இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் தினசரி மழை பொழிவதால் அடிக்கடி கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு நகரங்களில் தண்ணீர் தேங்கும். இங்கு உலகின் மிகப் பிரபலமான மழை காடுகள் அமைந்துள்ளது. மேலும் வளமான வரலாறு, வியப்பூட்டும் கலாச்சாரம், எழில் கொஞ்சம் நகரத்தின் அழகு என பல சிறப்புகளை கொண்டுள்ள இந்நகரம் சுற்றுலா பயணிகளுக்கு விருந்தளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.