வாழ்நாள் சான்றுக்காக வரக்கூடிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கருவூல அலுவலகங்களில் மருத்துவம் முதலுதவி மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தாளர்கள் அனைவரும் ஆண்டு தோறும் நேர்காணல் செய்து கொள்ள வேண்டும். வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு இணைய சேவையும் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் கருவூலத்திற்கு நேரடியாக ஆண்டு நேர்காணலுக்கு வர நேர்ந்தால் அவர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

அதன்படி ஓய்வூதியதாரர்கள் நேரடியாக கருவூலத்திற்கு வரும் போதுஅவர்களது ஓய்வூதிய புத்தகத்தில் அவர்களின் ஓய்வூதிய நேர்காணல் மாதம் குறித்து பதிவு செய்து கொடுக்க வேண்டும். அனைத்து கருவுலகங்களுக்கும் வழங்கப்பட்ட கைவிரல் பதிவு இயந்திரம் அனைத்தும் இயங்கும் நிலையில் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். தபால் மூலம் பெறப்படும் வாழ்நாள் சாலைகளை உடனடியாக கருவூலத்துறை மென்பொருளில் பதிவு செய்ய வேண்டும். நேர்காணலின்போது இணைய தலை இணைப்பது மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.