திமுக தலைவர்களின் ரூ.1.343,170,000,000 (கோடி) சொத்து பட்டியலை இன்று அண்ணாமலை வெளியிட்டார். மேலும் ரபேல் வாட்சிக்கான பில்லையும் வெளியிட்டார். மேலும் கேரளாவை சேர்ந்த நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணனிடமிருந்து ரபேல் வாட்சை வாங்கினேன். 2021 மார்ச்சில் ரபேல் வாட்சை வாங்கிய ராமகிருஷ்ணன் மே மாதம் அதை என்னிடம் கொடுத்தார். மேலும் வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் என்னுடைய நண்பர்கள் தான் கொடுக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் 3,75,000 ரூபாய் வாடகை வீட்டில் குடியிருக்கும் அண்ணாமலை, வேறொருவர் கொடுக்கும் வாடகையில் தங்கியிருப்பது அவருக்கு அசிங்கமாக இல்லையா என அமைச்சர் செந்தில் பாலாஜி கோபமாக கேட்டுள்ளார். திமுக மீது பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், ‘கட்சி தேசிய கட்சியாக இருந்தாலும், தலைவர் கோமாளியாக இருக்கிறார். முதல்வர் அனுமதி பெற்று அண்ணாமலை மீது நானே வழக்கு தொடர்வேன்’ என கூறினார்.