தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயிலுக்கான ஒருங்கிணைந்த டிக்கெட்டுகளை பெற செயலி அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த க்யூ ஆர் பயணச்சீட்டு முறை, செயலி 15 கோடியில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். நாட்டில் டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் ஒரே ஸ்மார்ட் கார்ட் பயன்படுத்தும் வசதி உள்ள நிலையில் ஒரே செயலி மூலம் டிக்கெட் பெறும் முறை சென்னையில் விரைவில் அமலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.