மலேசியாவை சேர்ந்தவர் எரிக்கா பைதுரி என்ற பணக்கார பெண் டிக்-டாக் தளத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தியேட்டரில் அனைத்து இருக்கைகளையும் அவர் முன்பதிவு செய்து தனி ஆளாக படம் பார்ப்பது போன்று காட்சி இருந்தது. மேலும் அவர் தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டு கண்ணாடி அணிந்திருந்த காட்சிகளும் அதில் இருந்தன.

அந்த மினி தியேட்டரில் 10 வரிசைகள் இருந்தது. மேலும் ஒவ்வொரு வரிசைக்கும் 16 சீட்டுகள் இருந்த நிலையில், அனைத்தும் காலியாக இருந்தன. இதனை பார்த்த நெட்டிசன்கள், எல்லாம் பணத்திமிரு, வசதியானவர் என்பதை காட்டிகொள்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.