10 அணிகள் இடையேயான 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல நகரங்களில் நடக்கிறது. இப்போட்டிக்கு சூப்பர் லீக் வாயிலாக புள்ளிபட்டியலில் டாப்-8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா போன்ற 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டது.

மீதம் உள்ள 2 அணிகளை தேர்வு செய்யா தகுதி சுற்று போட்டி நடத்தப்படுகிறது. இந்நிலையில் தகுதிசுற்று போட்டியில் விளையாடும் அணிகளின் பட்டியல் மற்றும் போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்டது. அந்த வகையில் தகுதிசுற்று போட்டி ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூலை 9-ம் தேதி வரை ஜிம்பாப்வேயில் 4 மைதானங்களில் நடைபெறுகிறது.