பொதுவாகவே சமையலறையில் அனைத்து உணவுகளையும் எளிதாக சமைக்க பிரஷர் குக்கர் பயன்படுத்துகிறோம். இதனுடைய பயன்கள் ஏராளமாக இருந்தாலும் பிரஷர் குக்கரில் சமைக்க கூடாத சில உணவுகள் உள்ளது. அவை தெரியாமல் சமைக்கும் போது உணவின் சுவை மற்றும் அமைப்பு மாறுபடும். அதன்படி பிரஷர் குக்கரில் சமைக்க கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரஷர் குக்கர் என்பது உணவை நீராவியில் சமைக்கும் அமைப்பில் உருவாக்கப்பட்டது. இதில் வருத்த உணவுகளை சமைக்க முடியாது. அப்படி செய்தால் சுவை மற்றும் வடிவத்தில் மாற்றம் ஏற்படும்.

கடல் உணவுகளையும் குக்கரில் சமைக்க கூடாது. ஏனென்றால் அவை எளிதாக வெந்துவிடும். குக்கரில் வைக்கும் போது உணவு குழைந்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

பாஸ்தாவை விரைவில் சமைத்து விட முடியும் என்பதால் குக்கரில் வைப்பதால் சுவை மாறிவிடும். எனவே பாரம்பரிய கொதித்தல் முறையில் சமைக்க வேண்டும்.

பால் சார்ந்த உணவுப் பொருட்களையும் குக்கரில் சமைக்க கூடாது. அப்படி செய்தால் உணவின் உண்மையான வடிவம் மாறிவிடும்.

பிரஷர் குக்கரில் தடிமனான கிரீம் போன்ற சூப்புகளை சமைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் குக்கரின் ஆல் கொடுக்கும் அழுத்தத்தால் சுவையில் மாற்றம் ஏற்படும்.

கேக் மற்றும் பிஸ்கட் போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் செய்ய நினைத்தால் நிச்சயம் சுவையில் மாற்றம் ஏற்படும். பேக்கிங் வேலைகளுக்காக வேறு ஒரு அடுப்பை பயன்படுத்த வேண்டும்.

பழங்களுக்கு அழுத்தம் கொடுத்து சமைப்பது என்பது சரியாக இருக்காது. இதனை வருத்தல் அல்லது பிற சமயல் முறைகளை பயன்படுத்தி சமைப்பது நல்லது. இப்படி செய்தால் மட்டுமே சுவை மற்றும் ஆரோக்கியம் என இரண்டையும் ஒரே நேரத்தில் நாம் பெற முடியும்.