தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் 72,000-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு 180 கோடி மதிப்பிலான கடன் உதவி வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த விழாவை பிரம்மாண்ட மாநாடு போல் திமுகவினர் நடத்திய நிலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பெண்கள் கூட்டம் திரண்டது. எந்த ‌ பொதுக் கூட்டத்திலும் இவ்வளவு பெண்கள் திரண்டதில்லை என்று கூறுகிறார்கள். இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலினை பெண்கள் தங்கள் வீட்டின் பிள்ளையாக ஏற்றுக் கொண்டதாக திமுகவினர் கூறி வருகிறார்கள்.

பெண்களின் மனதில் இடம் பிடித்து விட்டால் தேர்தலில் வெற்றி என்பது நிச்சயம் என்பது அரசியல் கட்சிகளின் கருத்து என்பது காலம் காலமாக கூறப்படும் நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் பெண்கள் மனதில் இடம் பிடித்து அவர்கள் வீட்டுப் பிள்ளையாக மாறிவிட்டதால் தேர்தலில் அவருக்கு நிச்சயமாக பெரிய வெற்றி வாய்ப்பு கிட்டும் என்று கூறுகிறார்கள். மேலும் கூட்டத்தின் போது நடமாடும் காய்கறி வாகனம், நடமாடும் உணவகம் ‌ போன்ற திட்டங்களை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்ததோடு, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அரசு வழங்கும் பணம் என்பது வெறும் பணம் அல்ல. அது அரசின் அக்கறை மற்றும் அன்பு என்று தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.