பெண் குழந்தைகளுடைய எதிர்காலத்திற்கு பெற்றோர்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். அந்த வகையில் பெண் பிள்ளைகளுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டமானது பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ என்ற இந்திய அரசின் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.

இது பெண் குழந்தைகளுடைய கல்வி மற்றும் திருமணத்திற்கான செலவிற்கு உதவி புரிகிறது. 10 வயதுக்குட்பட்ட மகளின் தந்தை அல்லது தாய் தனது குழந்தைக்காக இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம். இந்த திட்டத்தில், 8.2 சதவீத வட்டி கிடைக்கும். இதில், ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சமும், குறைந்தபட்ச டெபாசிட் வரம்பு ஆண்டுக்கு ரூ.250 ஆகும். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். 21 ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டம் முதிர்ச்சியடைகிறது மற்றும் முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் வட்டி உட்பட முழுத் தொகையும் திரும்பப் பெறப்படும். ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.22,50,000 டெபாசிட் செய்வீர்கள். 8.2 சதவீத வட்டியுடன் உங்களுக்கு ரூ.46,77,578 வட்டி கிடைக்கும். இந்த வட்டி நீங்கள் முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாகும்.

ஆண்டுதோறும் ரூ.50,000 டெபாசிட் செய்தால், மாதந்தோறும் ரூ.4,167 முதலீடு செய்வீர்கள். 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.7,50,000 முதலீடு செய்வீர்கள். 8.2 சதவீத வட்டி விகிதத்தின்படி, உங்களுக்கு மொத்தம் ரூ.15,59,193 வட்டியாக மட்டுமே கிடைக்கும்,