ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை உறுதி செய்வதற்காக பதிவு செய்த நாளிலிருந்து பத்து வருடத்திற்கு ஒரு முறையாவது ஆதார் ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் ஒருவேளை ஆதார்  தொலைந்து விட்டால் எவ்வாறு ஆன்லைன் மூலமாகவே புதிய ஆதார் கார்டை பெறுவது என்பது குறித்தான அறிவிப்பை UIDAI வெளியிட்டுள்ளது

அதற்கு முதலில், பிளே ஸ்டோரில் இருந்து mAadhaar என்கிற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இதன் பின்னர், உங்களது ஆதார் கார்டு எண் மற்றும் பயோமெட்ரிக்ஸ் மூலமாக லாகின் செய்து கொள்ளவும். இதனையடுத்து, ‘Download Aadhaar’ என்பதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள ‘இ-ஆதார்’ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வரும் 4 இலக்க OTP ஐ பதிவு செய்து Submit கொடுக்கவும். இதனையடுத்து, PDF வடிவத்தில் உங்களது ஆதார் மொபைலில் சேமிக்கப்படும்.