தமிழகத்தில் பெரும்பாலான நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாகத்தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மக்கள் பலரும் ரேஷன் கார்டு பெற முயற்சி செய்து வருகிறார்கள். அரசு பொது மக்களின் நலனை கருதி ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பெரும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது. இதனை பயன்படுத்தி பலரும் ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த விண்ணப்ப நடைமுறையின் போது ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது, பான் கார்டு, புகைப்படம், வருமான வரி சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகமாக ஆவணங்கள் தேவைப்படுகிறது.

அதே சமயம் விண்ணப்ப படிவத்தில் சரியான தகவல்களையும் வழங்க வேண்டும். அந்த படிவத்தில் கேஸ் சிலிண்டர் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதனை முறையாக பூர்த்தி செய்ய வேண்டும். தற்போது அதிக கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்காது எனக் கூறப்படுகிறது. இன்று பலரும் இரண்டு அல்லது மூன்று காஸ் சிலிண்டர்கள் வைத்துக்கொண்டு ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை ஆராயும் பணியில் அதிகாரிகள் இறங்கி உள்ளதால் 6 மாத காலம் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.