ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார்.‌ அதன் பிறகு நாம் தமிழர் கட்சி, தேமுதிக மற்றும் சுயேச்சைகள் பலரும் ஈரோடு கிழக்கில் போட்டியிடுகிறார்கள். ஈரோடு கிழக்கில் திமுக, தேமுதிக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தேர்தல் விதி மீறல்களை தடுக்காமல் பறக்கும் படையும், அதிகாரிகளும் வேடிக்கை பார்க்கிறார்கள். தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது நியாயமா?. ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறவில்லை என்றால் இந்த தேர்தல் எதற்காக நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.