ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பில் கே.எஸ் தென்னரசுவும், ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இபிஎஸ் தரப்பைச் சேர்ந்த சிவி சண்முகம் ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தற்போது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் இறந்த வாக்காளர்கள் 5,000 பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. அதன் பிறகு 4-ல் ஒரு பங்கு அதாவது சுமார் 50,000 வாக்காளர்கள் தொகுதியிலேயே இல்லை. எனவே இடைத்தேர்தல் சரியான முறையில் நடைபெற வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.