இஸ்ரேல் ஹமாஸ் இடையே 33 வது நாளாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரினால் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதை வலியுறுத்தி போர் நிறுத்த அழைப்பை உலக நாடுகள் விடுத்தது. ஆனால் இரண்டு தரப்பினரும் அதற்கு மறுத்துவிட்டனர். இதனால் இந்த போர் இன்னும் வெகு நாட்கள் நீடிக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இந்தியா தனது முழு திறனையும் பயன்படுத்தி இஸ்ரேல் காசா முனையில் நடத்தும் தாக்குதலை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஈரான் அரசு வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேல் காசா மக்கள் மீது நடத்தும் குற்றங்கள் முடிவுக்கு வர இந்தியா முழு திறணையும் பயன்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது