உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச மருத்துவ வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்தத் திட்டத்தில் பயன்படுவதற்கு ஆயுஷ்மான் ஆரோக்கிய அட்டை அவசியம். இந்த அட்டை கட்டணமில்லா சிகிச்சை கிடைக்க வழிவகை செய்கின்றது.

இந்த நிலையில் தகுந்த நேரத்தில் தரமான மற்றும் நிறைவான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மருத்துவ உதவி தேவைப்படும் அனைவருக்கும் முழுமையான வசதி முதல்வரின் இதிலிருந்து வழங்கப்படும் என்றும் ஆயுஸ்மான் அட்டை இல்லாதவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.