தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை என்பது தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன் வடிவின் மூலம் சிதைக்கப்பட்டு இருக்கிறது.

இது தொழிலாளர்கள் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மத்திய அரசு இதுபோன்ற சட்டத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு இயற்றிய போது அதனை வலுவாக எதிர்த்து விட்டு இன்று அதே சட்டத்தை ஏற்று இருப்பது திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்து காட்டுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.