உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp, இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியை மெட்டா நிறுவனம் நடத்தி வருகின்றது. சமீபத்தில் twitter நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தார்.

இந்நிலையில் ட்விட்டரை போலவே இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பயனர்களும் ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளத்தை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்தியாவில் ப்ளூ டிக் வசதியை பெறுவதற்கு ரூபாய் செலுத்த வேண்டும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.