சர்வதேச கிரிக்கெட்டுக்கான விதிகளை உருவாக்குதல், போட்டிகளை திட்டமிடுதல், தகுதியான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குப்படுத்துதல் போன்ற பணிகளை செய்துவரும் ஐசிசி என்றழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் விதிகளில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி

கள நடுவர் இனி சாஃப்ட் சிக்னல் கொடுக்காமல் 3ம் நடுவருடன் ஆலோசிக்க வேண்டும்.

ஃபாஸ்ட் பவுலரை எதிர்கொள்ளும் பேட்டர்கள், ஸ்டம்புக்கு அருகில் உள்ள கீப்பர் மற்றும் பேட்டருக்கு அருகில் உள்ள பீல்டருக்கு தலைக்கவசம் கட்டாயம்

ஃப்ரீ ஹிட் போடும்போது பந்து ஸ்டம்பில் பட்டாலும் பேட்டர் ரன் ஓடலாம்.

இந்த விதிகள் வரும் இன்று (ஜூன் 1ம் தேதி) முதல் அமலுக்கு வரும் என ஐசிசி அறிவித்துள்ளது.