தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான தகுதி நிபந்தனைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாட கூலி வேலை செய்யும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள், phh, அந்தியோதயா அன்னை யோஜனா ரேஷன் அட்டை வைத்திருக்கும் அட்டைதாரர்கள் ஆகியோருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் நல்ல நேரம் மிக வேகமாக வந்துள்ளது. முதல்வர் அதற்கான உரிய அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மார்ச் 20ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே இந்த அறிவிப்புக்காக இன்னும் நான்கு நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்.