இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் பெரும்பாலானோர் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் முன்பதிவு இல்லா டிக்கெட் எடுக்கும் பயணிகளின் வசதிக்காக யுபிஐ மற்றும் க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி எந்திரத்தின் தொடுதிரையில் இந்த அம்சம் கொண்டு வரப்பட உள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 254 எந்திரங்களில் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது