இன்றைய  காலகட்டத்தில் பண பரிவர்த்தனைகள் அனைத்துமே யுபிஐ செயலிகள் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் சிறிய மதிப்பிலான பண பரிவர்த்தனை வேகத்தை அதிகரிக்கவும், பண பரிவர்த்தனை செய்யும்  போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவும் இணைய வசதி குறைந்த பகுதிகளிலும் யுபிஐ லைட் வாலட் என்ற திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் offline மூலமாக குறிப்பிட்ட தொகையை பரிமாற்றம் செய்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

தற்போது இந்த திட்டத்தில் ஒரு கோடிக்கு மேலான மக்கள் பயனடைந்துள்ளனர். இதுவரை 200 ரூபாய் மட்டுமே பரிமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் ஆன்லைன் கட்டண பரிவர்த்தனை உச்சவரம்பை உயர்த்த மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து தற்பொழுது 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் யுபிஐ லைட் வாலட் பணபரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதாகவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.