இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். மற்றப் போக்குவரத்துகளை விட ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஹோலி பண்டிகை வர இருப்பதால் ஏராளமானோர்‌ சொந்த ஊருக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். ஆனால் பண்டிகை காலங்களில் ரயிலில் சீட் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்று என்பதால் தற்போது சீட் கிடைக்குமாறு முன்பதிவு செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இதற்கு நீங்கள் ஐஆர்டிசியின் விருப்பத்தை தேர்வு செய்து காத்திருப்பு டிக்கெட் முன்பதிவின்போது உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டை பெற வேறு எந்த ரயிலையும் தேர்வு செய்யலாம். இந்த திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ரயில்வே நிர்வாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு VIKLP என்ற ஆப்ஷனை தேர்வு செய்து முன்பதிவு செய்யப்பட்ட ரயிலைத் தவிர அந்த வழித்தடத்தில் உள்ள மற்ற 7 ரயில்களை தேர்வு செய்யலாம். ஒருவேளை விருப்ப தேர்வு இல்லை என்றால் முன்பதிவு செய்த பகுதிக்கு சென்று டிக்கெட்டை தேர்வு செய்து சப்மிட் பட்டனை கொடுக்க வேண்டும்.