மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் குளறுபடிகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது மற்றும் பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது போல கணக்கை காட்டுவது, மாலை நேரத்தில் பணி முடியும் முன்பாக வீட்டிற்கு கிளம்புவது என ஊழியர்கள் பல்வேறு குளறுபடி வேலைகள் செய்து வருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் மத்திய அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்கள் என்பதை சரிபார்க்கும் நோக்கத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவை கொண்டு வர மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது. அதன்படி ஆதார் அடிப்படையில் ஆன பயோமெட்ரிக் முறையில் மத்திய அரசு ஊழியர்களின் வரவைப்பதிவு செய்யப்படும் என மத்திய அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.