பிரதமர் முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பத்து முதல் 12 சதவீத பட்டியுடன் 10 லட்சம் ரூபாய் வரை பிணை இல்லாமல் கடன் பெறலாம். தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் கடனுக்கான செயலாக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை எனவும் பொதுத்துறை வங்கிகள் தவிர கிராம வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சிறுநீதி வங்கிகளில் இந்த கடனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.