தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த 2 திரைப்படங்களுக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன் பிறகு தல மற்றும் தளபதியின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் மத்தியில் மோதல் போக்கு நிலவியது. பல இடங்களில் தீயேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. அதோடு துணிவு கொண்டாட்டத்தின் போது எல்லாரும் மீது ஏறி நடனமாடிய பரத் குமார் என்ற அஜித் ரசிகர் தவறி விழுந்து பலியான சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் பல்வேறு விதமான பிரச்சினைகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக கூடாது என  தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக உட்லண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அதோடு நள்ளிரவு 1 மணி காட்சிகள் மற்றும் அதிகாலை 4 மணி காட்சிகளையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப் போவதாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.