இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் சைப்ரஸ் வாழ்  இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியா இன்று வலிமையான பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது.  உலகம் சந்தித்து வரும் அனைத்து விதமான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பங்களிக்கும் நாடாக உலகம் இந்தியாவை பார்த்து வருகிறது. சுதந்திரமான நாடாகவும் பார்க்கின்றனர். மேலும் ஒரே நேரத்தில் அனைவரையும் ஒரே மேடைக்கு கொண்டு வர நம்மிடம் திறமை இருக்கிறது” என கூறியுள்ளார்.