துருக்கி சிரியாவில் தொடர்ந்து 3 நாட்களாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஏராளமானோர்  உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் அருகே பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும் இதே போன்று இன்று அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் அருகே 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.