இந்தியாவிலேயே முதல்முறையாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறைக்கான பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் புதிய பாடத்திட்டத்தில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதால் தொல்லியல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முழுமையான தொல்லியல் துறைக்கான படிப்புகள் மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மட்டுமே உள்ளது.

பண்டைய வரலாற்றை வெளிக்கொண்டுவந்து நவீன தொழில்நுட்பத்துடன் அறிவியல் ஆய்வு நடத்தும் நிலையில் பல அறிய தகவல்கள் கிடைக்க பெறும். வெளிநாட்டு நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நகர வளாகம் என பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.