தெலுங்கானா மாநிலத்தின் ஜஹிராபாத்தை தளமாகக் கொண்ட டெக்கான் டெவலப்மெண்ட் சொசைட்டியை நிறுவியவர் பிவி சதீஷ். 77 வயதான இவர் உடல்நல குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். மிகவும் வறட்சியான பகுதியாக அறியப்பட்ட மெடாக் மாவட்ட பகுதியை சேர்ந்த பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட இவர் அந்த பணிகளில் வெற்றி பெற்றார்.

இந்தியாவின் சிறு தானிய மனிதராகவும் மக்களை கொண்டாட செய்தார். இந்த பணிகளுக்காக இவரை நிறுவனம் பல விருதுகளையும் வென்றுள்ளது. இவர் 1945 ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தவர். சிறுதானியங்களை பயிரிடுதல்,பயன்படுத்துதல் மற்றும் இயற்கை விவசாயம் ஆகியவற்றை செய்து வந்த இவர் பாரம்பரிய பயிர்களை பாதுகாக்க பெரும் முயற்சி மேற்கொண்டார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து இயற்கை விவசாய பணிகளை முன்னெடுத்துச் சென்றவர். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.