தமிழகத்தில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஊக்கத்தொகையை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்கள் மட்டுமே உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள்.

பகுதிநேர ஆராய்ச்சி மாணவர்கள் இதில் பயன்பெற முடியாது. முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயனுடைய 8 லட்சத்திற்கு மிகாமல் வருமான வரம்பு இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க முதுகலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதே சமயம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிற கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களாக இருக்கக்கூடாது.

பல்கலைக்கழகத்தால் மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட படிப்பு பிரிவு கால அளவில் அடிப்படையில் அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும். முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களில் கலை பிரிவு, அறிவியல் பிரிவு மற்றும் பொறியியல் பிரிவு என பிற பிரிவுகள் அந்தந்த ஆண்டுகளில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்றது போல தேவையான விகிதத்தில் ஊக்கத்தொகை பிரித்து வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.