புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த நிலையில். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய அந்த மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆண் குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு காட்டமாக அறிவுரை வழங்கியிருக்கிறார்.  மேலும் பெற்றோர்கள் ஆண் குழந்தைகளை இப்படி வளர்க்காதீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமியை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் கஞ்சா போதையில் மொட்டை மாடிக்கு தூக்கி சென்று பலகாரம் செய்துள்ளார். அதைவிட கொடுமை இந்த சத்தத்தை கேட்டு அங்கே வந்து 59 வயது முதியவரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார் .

இதில் சிறுமி கத்தி சத்தம் போடவே சிறுமியை சரமாரியாக தாக்கியத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து  அந்த காமக்கொடூரர்கள் சிறுமியை சாக்கு முட்டையில் கட்டி சாக்கடையில் வீசி சென்றார்கள். இதனை எடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து நிலையில் அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர்களும் பொதுமக்களும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இது ஒருவரும் இருக்க , ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரி கொடூர சம்பவத்தை மேற்கோள் காட்டி பேசினார்.

புதுச்சேரியில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இது போன்ற கொடூர சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த குற்றங்களுக்க அதை செய்பவர்கள் மட்டுமே பொறுப்பாக கூடாது. மாறாக அவர்களை வளர்த்த பெற்றோர்களையும் நாம் கண்டிக்க வேண்டும். நம் வீடுகளில் பெண் பிள்ளைகள் இரவு 8 மணிக்கு மேல் வந்தால் என்னென்ன கூத்து எல்லாம் நடக்கும் .பொம்பள பிள்ளை எட்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வருவியா இவ்வளவு நேரம் என்ன பண்ண? எங்க இருந்த? என்று எத்தனை கேள்விகள் கேட்போம்.

அதேபோன்று ஆண் பிள்ளைகளை இந்த சமுதாயம் கேட்பதில்லை. இரவு 12 மணிக்கு கூட வரலாம். இரவு 2 மணி மேலாகியும் வரலாம்.. யாரும் அவனிடம் எதுவும் கேட்பதில்லை அப்படி கண்காணிக்கப்படாத ஆண் பிள்ளைகள் தான் இப்படிப்பட்ட நிகழ்வுக்கு காரணமாக இருக்கிறார்கள் . பிள்ளைகளை கண்டித்து வளர்ப்பதை விட கண்காணித்து வளருங்கள் என்று பேசியுள்ளார்.