தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மது கடைகளிலும் கூடுதலாக மது வகைகள் இருப்பு வைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே டாஸ்மாக் கடைகளில் ஏராளமானோர் புதிய மது வகைகளை வாங்கிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ஐந்து கோடியே 35 லட்சத்திற்கும், ராணிப்பேட்டையில் மூன்று கோடியே 43 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் என மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் எட்டு கோடியே 78 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ஒரு கொடியை 73 லட்சத்து 758 ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.