இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் 23 வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் அவசரத்துக்கு வந்தே பாரத் ரயில் கழிப்பறையை பயன்படுத்தி ரூ.6000-ஐ இழந்தார். அப்துல் காதர், போபால் ரயில் நிலையத்தில் சிறுநீர் கழிக்க, வந்தே பாரத் ரயிலில் ஏறியுள்ளார். அவர் கீழே இறங்குவதற்குள் ரயில் புறப்பட்டதால் ரயிலில் மாட்டிக்கொண்டார். இதனால் அபராதம், மீண்டும் போபால் திரும்பிய செலவு, முன்பதிவு செய்த ரயிலை தவறவிட்ட டிக்கெட் தொகை இழப்பு என மொத்தம் ரூ.6000 இழந்தார்.