நடிகர் ரஞ்சித் அரைகுறை ஆடையுடன் ஆடுவது தான் ஹாப்பி சண்டேவா என்று விமர்சனம் செய்தார்.  கோவை சவுரிபாளையத்தில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது .இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை ஆடி அசத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரஞ்சித் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், நான் பிறந்த மண்ணில் நிற்பது எனக்கு பெருமை. நமது கலாச்சாரமான வள்ளி குமியாட்டம், கோலாட்டம், குச்சியாட்டம் போன்ற கலைகள் நம்முடைய மண்ணில் பரவி இருந்த நிலையில் தற்போது மண்ணோடு மண்ணாக போய்விட்டது.

இன்று இருக்கும் காலகட்டத்தில் சினிமா பட நடிகர்கள் துணிக்கடை திறப்பு விழாவிற்கு கூட 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை பணம் வாங்கி கலந்து கொள்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் ஆடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. எனக்கு அரசு அதிகாரி என்ற ஒரு அதிகாரம் இருந்தால் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவேன். இது போன்ற கலாச்சார சீரழிவு நோக்கி எடுத்துச் செல்லும் எனவும் முதலில் செல்போன் பேசுவதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பதற்காக மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள். ஹாப்பி சண்டே போன்றவற்றை ஊக்குவிப்பதை விட இதுபோல பாரம்பரிய கலாச்சாரமான வள்ளி கும்மியாட்டத்தை ஊக்குவித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி உள்ளார்.