அரசு பத்திரங்களை வாங்க புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். நிதி கொள்கை கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், பத்திர சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறினார். இந்த செயலில் UPI அல்லது இன்டர்நெட் பேங்கிங் மூலம் பணத்தை அனுப்பி அரசு பத்திரங்களை எளிதாக வாங்கி விற்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.