தமிழக முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு எளிய முறையில் ஆங்கிலம் கற்பிப்பதற்காக பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் ஜாலி பியூச்சர்ஸ் நிறுவனம் போன்றவை இணைந்து புதிய முறையிலான பயிற்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி 25 மாவட்டங்களில் இந்த ஜாலி ஃபோனிக்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மீதமுள்ள மாவட்டங்களில் ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வேடிக்கையான முறையில் ஆங்கிலம் கற்பிப்பதற்கான ஒரு விளையாட்டு வழிமுறை. இந்த முறையில் ஒலிகளை உச்சரிப்பது குழந்தைகளை திருத்த ஆசிரியர்களுக்கு உதவுகிறது. ஜாலி லேர்னிங் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள பயிற்சியாளர்களால் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.