உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார். தலைவர்களை தொடர்ந்து பொதுமக்கள் பலரும் தாமரை தரிசிக்க அயோத்திக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்காக புதிய சலுகையை பேடிஎம் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

அதாவது அயோத்தி செல்ல திட்டமிடும் ஆயிரம் நபர்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சலுகை ஜனவரி 19 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக paytm செயலி மூலம் பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஆயிரம் நபர்களுக்கு பஸ் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த சலுகையை பெறுவதற்கு  ‘BUSAYODHYA’  என்ற விளம்பர குறியீட்டை மக்கள் பயன்படுத்தலாம்.