இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி மூத்த குடிமக்களுக்கான காலவைப்பு திட்டத்தை எஸ்பிஐ வங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் சேமிப்பதற்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். எஸ்பிஐ வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மூத்த குடிமக்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வுக்காக டெபாசிட் செய்யலாம்.

இதில் வழக்கமான வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத் தொகைக்கு அரை சதவீதம் வழங்கப்படும் எனவும் மூத்த குடிமக்கள் ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை உள்ள பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு ஒரு சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.5% வருடாந்திர வட்டியை வழங்குகின்றது. மூத்த குடிமக்கள் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையிலான திட்டத்தில் எஸ்பிஐ வீகேர் டெபாசிட் திட்டத்தின் கீழ் கூடுதலாக அரை சதவீதம் பிரீமியம் பட்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.