தமிழக சட்டப்பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கான விவாதம் நடைபெற்றது. அதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துறை சார்ந்த 19 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி TN அலர்ட் கைபேசி செயலி மேம்படுத்த TN ஸ்மார்ட் செயலி 12.50 கோடி ரூபாயில் உருவாக்கப்படும். கடலூர் மாவட்டம் கொள்ளிடம் மற்றும் இடது கரையில் 14.50 கோடியில் பலப்படுத்தப்படும் என்றும், மயிலாடுதுறை திருமயிலடி முதலை மேடு பகுதியில் 16 கோடியில் பேரிடர் மீட்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும் இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிந்து கொள்ள புதிய செயலிகள் உருவாக்கப்படும். நில அளவை மற்றும் நில ஆவணங்கள் தொடர்பான இ சேவைக்கு கால் சென்டர்கள் அமைக்கப்படும். கரூர் புகலூர் வடக்கு பகுதியில் 50 ஆண்டு காலமாக வசித்து வருபவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.