நம்மில் பலருக்கு சைவ உணவுகளை விட அசைவ உணவுகள் மீது தான் விருப்பம் அதிகம். எனினும் ஒரு நகரத்தில் அசைவ உணவுகளே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பாலிதானா என கூறப்படும் இந்நகரத்தில் ஒரு அசைவ உணவகம் கூட இல்லையாம். இங்கு இறைச்சி, முட்டைகளை நுகர்தல், விற்பனை செய்தல் என்பது முற்றிலும் சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது. மேலும் இந்நகரத்தின் ஒரே மலையில் 900-க்கும் அதிகமான கோவில்கள் இருக்கிறது. இது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்களுக்கு இது மிகவும் புனிதமான இடம். சமண மதத்தின் தலமாக இருப்பதே இது சைவ நகரமாக இருப்பதற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது. கடந்த 2014-ம் வருடத்தில் 200 ஜென் துறவிகள் 250 இறைச்சி கடைகளை தடை செய்து நகரத்தை இறைச்சியற்ற மண்டலமாக அறிவிக்க வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.