இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியை அடைந்துவிட்டது. தற்பொழுது உலகம் முழுவதுமேAI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருகின்றது. அதாவது மனித தேவைகளை குறைக்கும் விதமாக இந்த தொழில்நுட்பத்தின் மூலமாகவே செய்திகள் வாசிப்பது என ஏகப்பட்ட தொழில்நுட்பம் வர ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் தற்பொழுது ஸ்டோக்கால் கடந்த 18 வருடங்களாக 47 வயது நிரம்பிய பெண் ஒருவர் பேசும் சக்தியை இழந்து அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அந்த பெண்ணை AI  தொழில்நுட்பத்தின் மூலமாக அமெரிக்காவை சேர்ந்த அறிவியலாளர்கள் பேச வைத்துள்ளார்கள். அதாவது மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பேச முடியாமல் தவித்து வந்த பெண்ணின் மூளை அனுப்பும் சிக்னல்களை உள் வாங்கிப்பத்தின் மூலமாக அந்த பெண்ணை பேச வைத்து சாதனை படைத்துள்ளார்கள். மேலும் இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக மருத்துவத்தில் கூடுதல்  சிகிச்சைகள் வழங்குவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.