சமீபத்தில் மானாமதுரை மட்பாண்டங்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மண்பாண்டத் தொழிலுக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகரம் மிகப் பெயர் பெற்றது. மானாமதுரை மண்பாண்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் களிமண்ணானது வைகை ஆறு மூலம் வளப்படுத்தப் படுகிறது.  பானையின் அடிப்பகுதி சரியாக வட்டமாக இருக்க வேண்டும் மற்றும் பானைகள் மிகவும் வலுவாக இருக்க, மண், களிமண் மற்றும் வெப்பத்தின் சரியான விகிதத்தில் தேவைப்படுகிறது.

இந்தப் பானையின் மூலப்பொருட்கள் மண், நீர், மணல், ஈயம், கிராஃபைட், கால்சியம் சுண்ணாம்பு, சாம்பல், சிவப்பு ஈயம், சோடியம் சிலிக்கேட், மாங்கனீசு, இரும்பு மற்றும் நெகிழியாக்கும் செயல்முறை ஆகியவை ஆகும். இந்தப் பானைகள் மீது வெவ்வேறு நிறங்களில் வர்ணம் பூசப்படும்.