இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தபால் அலுவலக திட்டம் அளவுக்கு சில வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு கூடுதலான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அதன்படி பொது மக்களுக்கு மூன்று சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது. இதனைத் தவிர மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை கூடுதலாக வட்டி வழங்கப்படுகின்றது. அதன்படி எந்தெந்த வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு எவ்வளவு வட்டி விகிதங்களை வழங்குகின்றன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

RBL வங்கியில் பொதுமக்களுக்கு 3.50% முதல் 7.80% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.00% முதல் 8.30% வரை

IDFC ஃபர்ஸ்ட் வங்கியில் பொதுமக்களுக்கு 3.50% முதல் 7.50% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.00% முதல் 8.00% வரை

கரூர் வைஸ்யா வங்கியில் பொதுமக்களுக்கு 4.00% முதல் 7.20% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 5.90% முதல் 7.70% வரை

கனரா வங்கியில் பொதுமக்களுக்கு 4.00% முதல் 7.25% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.00% முதல் 7.75% வரை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பொதுமக்களுக்கு 3.50% முதல் 7.25% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.00% முதல் 7.75% வரையிலும் வட்டி  வழங்கப்படுகிறது.